இந்தியா -நியூசி ஆட்டம் தொடங்கிய வேகத்திலே, முடிவு செய்யப்பட்ட மெடல்! யாருக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


உலக கோப்பையில் இன்றைய போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலா மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டி தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் தோல்வியை பெறாத அணி என்ற பெருமையை இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 4 வெற்றிகளை பெற்று தன் வசம் வைத்திருக்கிறது. 

இந்த இரு அணிகளும் இன்று மோதுவதால், இன்றைய போட்டியில் ஏதேனும் ஒரு அணி தோல்வியை சந்தித்தே ஆகவேண்டும் என்பதாலும், தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை யார் தக்க வைப்பார் என்பதாலும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவும், முஹம்மது ஷமியும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, டேவன் கான்வே, யங் களமிறங்கினர். நான்காவது ஓவரை முஹம்மத் சிராஜ் வீசிய நிலையில், அவருடைய பந்தில் ஸ்கொயர் லெக்கில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யரின் துடிப்பான கேட்சில் ஆட்டமிழந்தார். 

கேட்சை பிடித்த வேகத்தில் பந்தை தூக்கி போட்ட ஸ்ரேயாஸ் அய்யர், பீல்டிங் கோச் நோக்கி, இன்றைய போட்டிக்கான மெடல் எனக்குதான் என சைகை காட்டினார். இதுவரை நடந்த போட்டிகளில் விராட் கோலி, ஷார்துல் தாக்கூர், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறந்த பீல்டிங் செய்ததற்கான மெடலை பெற்றிருக்கின்றனர். இன்றைய போட்டியில் நிச்சயமாக அது ஸ்ரேயாஸ் அய்யருக்கு தான் வழங்கப்படும் என போட்டியை பார்த்தவர்களுக்கு உடனே தெரிந்திருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyas Iyer will be expect the medal for his phenomenal fielding


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->