கடைசி 3 பந்து, 3 ரன், 3 விக்கெட்! மிக மிக மிக அரிதான சாதனை!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் பெண்களுக்கான 100 பந்து கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஓவருக்கு 5 பந்துகள் என்று இந்த ஆட்டம் நடைபெறுகிறது. 

நேற்று நடந்த ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் பலபரிச்சை செய்தன. 

ஆட்டத்தில் டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஆடிய வெல்ஷ் பயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில், 7 விக்கெட்டுகளை இழந்து, 137 ரன்கள் எடுத்தது. 

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணி, 100 பந்துகளில், 4 விக்கெட்டுகளை இழந்து, 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் என்ற நிலை இருந்தது.

இந்த ஓவரை வீராங்கனை ஸ்மாயில் வீசினார். முதல் பந்தில் 1 ரன்னும், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 

அடுத்த மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்மாயில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றி பெற செய்தார்.

கிரிக்கெட் உலகில் இதுபோன்ற அரங்கேறுவது மிக மிக அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shabnim Ismail Hundred Women 2023 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->