நம்பர்.1 பந்து வீச்சாளர் "ரவிச்சந்திரன் அஸ்வின்".. 864 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தல்..!! - Seithipunal
Seithipunal


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பவுலர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் பவுலர் ஆண்டர்சன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி இருந்தார். இதன் காரணமாக அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை அஸ்வின் பிடித்திருந்தார்.

தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கான தரவரிசையில் 864 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 376 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தினாள் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் முதல் பேட்ஸ்மேனாகவும், ஹர்திக் பாண்டியா இரண்டாவது ஆல்ரவுண்டராகவும் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டாப் 10 வீரர்களில் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் ஒருநாள் கிரிக்கெட் பவுலர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 9-வது இடத்தில் உள்ளார்.

ரிஷப் பந்த் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா 8-வது இடத்தில் இருந்து வரும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டராக முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று அக்சர் படேல் டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravichandran Ashwin become no1 bowler in test cricket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->