ராஜஸ்தான் அணி வெற்றி..சுனில் நரைன் மற்றும் பட்லர் சதம்.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 31வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கேட்களை இழந்து 223 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 42 பந்துகளில் 109 ரன்களை குவித்தார். 

போட்டியின் இரண்டாம் பாதியில் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 224 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 107 ரன்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

கொல்கத்தா அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது . ராஜஸ்தான் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 1வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan won the match sunil and better centurycentury


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->