இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகல்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.


 இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தூரில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வரமாட்டார் என ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா வீரர்கள் தொடர்ச்சியாக வெளியேறுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pat Cummins ruled out of 3rd test against India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->