தோனி அடித்த முதல் சிக்ஸர்! அதுவும் கிடைத்த இரு பந்துகளில் அப்பவே அப்படி அசத்தியிருக்கிறார் தல தோனி!  - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டின் மின்னல் வேக விக்கெட் கீப்பர், அதிரடி ஆட்டக்காரர், கேப்டன் கூல் என்ற பல்வேறு பெயர்களால் போற்றப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 42 வது பிறந்தநாள், அவர் ரசிகர்களாலும், கிரிக்கெட் பிரபலங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மின்னலாக விக்கெட் கீப்பிங் செய்யும் வல்லமை பெற்ற மகேந்திர சிங் தோனி, சிக்ஸர் அடிப்பதிலும் சூரன் தான். 

அதிலும் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பல கோடி ரசிகர்களை ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் தோனி. களமிறங்கினாலே ஹெலிகாப்டர் ஷாட் பறக்குமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் கத்தி கூச்சலிடத் தொடங்கி விடுவார்கள்.

 

அண்மையில் நடந்த ஐபிஎல் தொடரில் கூட மகேந்திர சிங் தோனி இரண்டு பந்துக்காவது இறங்கினால் போதுமே, ஏன் பேட் எடுத்து களம் இறங்கினாலே போதாதா என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து அலை கடலென மைதானத்தில் குவிந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் 360 சிக்ஸர்களை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் ஆச்சே, ஐபிஎல் தொடரில் மட்டும் 239 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார்.

இதுபோக, அவர் ஆரம்பகாலத்தில் பீகார், ஜார்க்கண்ட், கிழக்கு மண்டலம், கிளப் போட்டிகள், ஜுனியர் கிரிக்கெட், பள்ளி அளவிலான கிரிக்கெட் ஆட்டங்கள் என்று சுமார் 1000 சிக்ஸர்களை தோனி விலாசி இருப்பார்.

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி அடித்த முதல் சிக்சர் எந்த அணிக்கு எதிரானது? எப்போது? என்று உங்களுக்கு தெரியுமா?

கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மகேந்திர சிங் தோனி அறிமுகமானார். 

இந்த தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்து மட்டுமே மகேந்திர சிங் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது.

வந்து வீசியவர் காளி முகமது. அவர் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு பார்க்க விட்டார் மகேந்திர சிங் தோனி. அதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி அடித்த முதல் சிக்சர்.

அடுத்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 10 சிக்ஸர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் மகேந்திர சிங் தோனி. 

மகேந்திர சிங் தோனியின் சிக்சர் தருணங்களில் 2011 உலக கோப்பை தொடர் முக்கியமானது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சிக்சர் அடித்து பல ஆட்டத்தை முடித்து வைத்தார் மகேந்திர சிங் தோனி.

அந்தத் தொடருக்கு பின்பே அவருக்கு 'சிறந்த பினிஷர்', சிக்ஸர் பினிஷர் என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni 1st International Special Six


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->