தாக்குதல் எதிரொலி.! பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி.!! முக்கிய விவகாரத்தில் கைவைக்கப்போகும் இந்தியா.!!  - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் வியாக்கிழமை காஷ்மீரில் துணை இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை இராணுவத்தினர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து உள்ளது. மேலும், இந்த தாக்குதலுடன் தங்களை சம்மந்த படுத்துவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டை தனிமை படுத்த சுங்க வரி கட்டணத்தை 200 % உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று தீவிரவாதத்தை ஒடுக்க முக்கிய அறிவிப்பு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று ஐபிஎல்-ன் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதேபோல், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி ஆட கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் சுரேஷ் பாஃப்னா, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.,க்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 16 ஆம் நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களின் போது மட்டும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்று வருகிறது. அதை தவிர மற்ற எந்த தொடர்களிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL HEAD SAY WE DONT PLAY WITH PAKISTAN


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->