சற்றுமுன் மைத்தனத்தில் எழுந்து நின்ற ரசிகர்கள்.!! பரபரப்பை முடித்துக்கட்டிய தோணி.!! வெற்றி.. வெற்றி.. வெற்றி..!!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 5 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கும், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். 

இதனையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவருடன் கைகோர்த்த ஷான் மார்ஸ்ம் நிதானமாக ஆடினார். உஸ்மான் கவாஜா 34 ரன்களுக்கும், ஷான் மார்ஸ் 39 ரன்களுக்கும், யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மட்டும் நிலைத்து நின்று ஆடி 58 ரன்களை கடந்த போது, யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ் (10 ரன்), ஜெயி ரிச்சர்ட்சன் (16 ரன்), ஆடம் ஜம்பா (8 ரன்), யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ரோஹித் சர்மா 9 ரன்களுக்கும், தவான் 23 ரன்களுக்கும் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். அதன்பின் விராட் கோலியுடன் கைகோர்த்த தல தோணி கணிசமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

விராட் 43 ரன்கள் எடுத்தபோது,  ஜெயி ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து, தொனியுடன் கைகோர்த்த கெதர் ஜாதவ் நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர்.

பரபரப்பாக போய்  கொண்டிருந்த ஆட்டத்தில் இன்னும் 14 பந்துகள் உள்ள நிலையில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய சசூழ்நிலை வந்தது. அப்போது, மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் தோணி அவுட் ஆக மாட்டாரா என்று ஒரு பக்கம் வேண்டி கொண்டிருக்க, மறுபக்கம், இந்திய ரசிகர்கள் டோனியை உற்சாகப்படுத்த எழுந்து நின்று கத்தி கூச்சலிட்டனர்.

இறுதியில் இந்திய அணி   ஓவர்களில்,  3 விக்கெட் இழப்பிற்கு, 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டோனி 87 ரன்களுடனும், கெதர் ஜாதவ் 61 ரன்களுடனும் இந்திய அணி வெற்றி பெற கடைசிவரை அவுட் ஆகாமல், களத்தில் நின்று வெற்றிபெற வைத்தனர் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN WIN 3RD ODI AGAINST AUS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->