இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! கேப்டன் மாற்றம்! முக்கிய வீரர்களுக்கு ஓய்வு! அறிமுக வீரராக புதிய விக்கெட் கீப்பர்! பாண்டியா, ஜாதவ், புவி, பும்ரா நீக்கம்!  - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய அணியின் புதிய வீரராக ரிஷப் பாண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர் தோணி அணியில் நீடிக்கிறார். ஓய்வில் இருந்த கேப்டன் கோலி அணிக்கு திரும்புகிறார். அதனால் ஆசிய போட்டியில் கேப்டனாக பணியாற்றிய ரோஹித் சர்மா அணியில் வீரராக தொடர்கிறார். 

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவ வீரர்களான புவனேஷ், பும்ரா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஷமி, கலீல் அகமது, சர்துல் தாகூர் கூட்டணி அணியில் நீடிக்கிறது. 

காயம் காரணமாக அணியில் இருந்து கெதர் ஜாதவ், பாண்டிய நீக்கப்பட்டுள்ளனர். 14  பேர் கொண்ட அணியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பந்த், ஜடேஜா, சாஹல், குல்தீப், ஷமி, கலீல் அகமது, சர்துல் தாகூர், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

English Summary

indian squad annaounce for first two ODI againstSeithipunal