உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்.. பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர்..? - Seithipunal
Seithipunal


ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி இன்று மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலான மாற்று வீரர் மற்றும் காத்திருப்பு பட்டியல் வீரர்களான முகம்மது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வரும் அக்டோபர் 11ம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். மேலும், பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு பட்டியல் வீரர்கள் : முகம்மது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team travelling to Australia for participate T20 World Cup


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->