பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் சவாலானது - ரோகித் சர்மா பேட்டி..! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதியது. அந்த ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அந்த பெட்டியில் அவர் தெரிவித்ததாவது, "ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களுக்கு தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய தயங்கவில்லை. 

தற்போது நடக்கும் ஆட்ட நிலை மற்றும் அந்த ஆட்டம் செயல்படும் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதன் அழுத்தம் நிலையானது. 

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் சவாலானது. ஒன்பது ஆண்டுகளாக ஐ.சி.சி. போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றமே. ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி பி.சி.சி.ஐ. தான் முடிவு செய்யும். 

பாகிஸ்தான் செல்வது தொடர்பாக பி.சி.சி.ஐ. என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாளைய போட்டியில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து மட்டுமே தற்போது யோசனை செய்துக் கொண்டிருக்கிறோம்" என்று இந்தியன் கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket team captan rohit sharma press meet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->