மீண்டும் ஆட்டம் கண்ட இந்திய அணி! கண்ணீர் விட்ட வருணபகவான்! பாதியிலே ஆட்டம் நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கபட்டது. குறிப்பாக மூன்றாவது வீரராக களமிறங்கும் டெஸ்ட் வீரர் புஜாரா களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கபட்டது.

தொடக்க வீரர்களாக சோபிக்காத விஜய், தவான் இருவரில் தவான் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினர்.  நேற்று முதல் நாள் மழை பொழிந்ததால் நாள் முழுவதும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழை பொழிந்து ஈரப்பதம் அதிகம் இருக்கும் எனபதால் இங்கிலாந்து அணி இந்த முடிவினை எடுத்துள்ளது.  

இந்திய அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் தவான் நீக்கப்பட்டு புஜாரா இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆட்டம் தொடங்கிய முதலே வேகப்பந்து வீச்சு தாறுமாறாக இருந்தது. சூழலை சரியாக பயன்படுத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் முதல் ஒவரிலேயே முரளி விஜயை அற்புதமான அவுட்ஸ்விங்கரில் ஆட்டமிழக்க செய்தார். மிகவும் எச்சரிக்கையாக ராகுலும் புஜாராவும் பந்தை தொடவே தயங்கி தடுப்பாட்டம் ஆடினார்கள்.

ஆனால்  ஆண்ட்ராசோனின் துல்லிய பந்துவீச்சில் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின்னர் கேப்டன் விராட் கோழி களமிறங்க கூடவே மழையும் களம் இறங்கியதால் அதனோடு ஆட்டம் நிறுத்தப்பட்டு களத்தை விட்டு வீரர்கள் ஓய்வறை திரும்பினார்கள். 11 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india england 2nd test rain stops play


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->