இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த ஆஸ்திரேலிய அணி.! மொத்தமும் காலி.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி இருவரும், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். ஆரோன் பின்ச் 5 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கும் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவருடன் கைகோர்த்த ஷான் மார்ஸ்ம் நிதானமாக ஆடினார். உஸ்மான் கவாஜா 34 ரன்களுக்கும், ஷான் மார்ஸ் 39 ரன்களுக்கும், யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மட்டும் நிலைத்து நின்று ஆடி 58 ரன்களை கடந்த போது, யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு புடிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus 3rd odi first half


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->