உலக கோப்பைக்கான இறுதி ஆட்டமே இறுதி! - அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார். 

தனது ஓய்வு குறித்து அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவிக்கையில், "இங்கிலாந்து அணிக்காக விளையாடியது எனக்கு கிடைத்த பாக்கியம். 

இங்கிலாந்து அணியில் என்னுடைய அந்த பயணத்தைப் பற்றி நான் நினைத்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கை உண்மையில் திருப்தி அளிக்கிறது. 

ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும், நான் அணிக்காக செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை என்னால் மறக்க முடியாது.

டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார்.

34 வயதாகும் அலெக்ஸ் ஹேல்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இங்கிலாந்து அணியின் பல வெற்றிகளுக்கு பெரும் பங்கு வகித்தவர். 

குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான் ஆட்டத்தில் ஜோஸ் பட்லருடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் ஆட்டத்தில் இங்கிலாந்துக்காக விளையாடியாதே அலெக்ஸ் ஹீல்ஸ்-ன் கடைசி ஆட்டமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England cricketer Alex Hales Retirement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->