ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்த இரு வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆஷஸ் தொடரின் கடைசி ஆட்டம் தான், இங்கிலாந்து அணி வீரர்கள் இருவரின் இறுதி டெஸ்ட் ஆட்டமாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இங்கிலாந்து அணியின் இரண்டு வீரர்கள் ஓய்வு பெற்று இருப்பது, அந்த அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றி, அபாயகரமான பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்ற பிராட் ஓய்வை அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து அவரின் பேட்டியில், என்னுடைய இந்த கம்பேக் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த ஆஷஸ் தொடர் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தொடராகவும் அமைந்துள்ளது.

நான் ஏற்கனவே ஓய்வை அறிவித்த பிறகு, மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளேன். இந்த தொடரில் நான் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

எனது ஓய்வு முடிவை கைவிட்டு இந்த ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்று கேப்டன் ஸ்டோக்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதனால் தான் ஆடினேன்.

ஆனால் எனக்கு இதுவே கடைசி டெஸ்ட். இதன் பிறகு என்னுடைய ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன். மீண்டும் நான் விளையாட வரவேண்டும் என்று கேப்டன் ஸ்டோக்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பினால், அந்த மெசேஜை டெலிட் செய்து விடுவேன்" என்ற கலகலப்பாக மொயின் அலி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மொயின் அலி ஓய்வு பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மோயின் அலி அறிவுத்திருந்தார்.

பின்னர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரில் விளையாட வேண்டும் என்று ஸ்டாக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மீண்டும் ஆஷஸ் தொடரில் களமிறங்கினார்.

36 வயதாகும் மொயின் அலி, 68 டெஸ்ட் ஆட்டங்களில் இதுவரை விளையாடி உள்ளார். 3094 ரன்களையும், 201 விக்கட்டுகளையும் மொயின் அலி கைப்பற்றியுள்ளார்.

நடந்து முடிந்த இந்த ஆஷஸ் தொடரின் கடைசி ஆட்டத்தின், இரண்டாவது இன்னிங்க்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Cricket Players announce retirement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->