நடையைக் கட்டுமா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து?! இலங்கையுடன் 156 ரன்களுக்கு சுருண்ட பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

சிறிய ஆடுகளம் என்பதால் பேட்டிங் சாதகமாக இருக்கும் என கருதி முதல் பேட்டிங் எடுத்தது. அது சரி என்பது போலவே அவர்களது தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ டேவிட் மலான் சுமாரான தொடக்கத்தினை அளித்தனர். டேவிட் மலான்  28 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களிலும் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் நடைப்பயிற்சிக்கு வந்தது போல, வருவது போவதுமாக சென்று கொண்டிருந்தனர். 

பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் வந்த அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு சென்று கொண்டே இருக்க, இறுதியாக 33.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென்ஸ் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கையை பொறுத்தவரை அதிகபட்சமாக லஹிரு குமாரா மூன்று விக்கெட்டுகளையும், கசன் ரஜிதா, ஆஞ்சலோ மேத்யூஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இலங்கை வீரர் மகிஷா பதிரனா காயமடைந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக, நீண்ட நாட்களாக ஒரு நாள் போட்டிகளே ஆடாத இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான ஆஞ்சலோ மேத்யூஸ் அணிக்கு அழைக்கப்பட்டு, வந்த உடனே அணியிலும் சேர்க்கப்பட்டு இன்று விளையாடினார். 

திடீர் வருகை தந்த அவர் தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியதுடன், டேவிட் மலான் மற்றும் மொயின் அலி இருவரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஜோ ரூட்டின் ரன் அவுட்டிலும் தனது பங்களிப்பை அளித்து அணிக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார். 

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இலக்கை துரத்த இருக்கின்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து நடையை கட்ட வேண்டிய நிலை ஏறக்குறைய உறுதி ஆகிவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England all out 156 runs against sri lanka in world cup 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->