வருடகணக்கில் மறைத்த ரகசியத்தை வெளியிட்ட தோனி! தல தல தான்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன்களில் குறிப்பிட வேண்டியவர்களில் மிகச்சிலரே..  அதில் மிகவும் முக்கியமானவர் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வீரருமான தோனி. அவர் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் போதே பதவியை கோலிக்கு வழங்கியது ஏன் என்பதற்கு இப்போது பதில் அளித்திருக்கிறார்.

ஐசிசி நடத்தும் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எனபதற்கு சொந்தக்காரர் தோனி. அவர் கடந்த  2014-ஆம் ஆண்டே  டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலே ஒருநாள் மற்றும் 20 - 20 போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

அப்போது இந்த விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்  இது குறித்துப் பதிலளிக்காமல் மௌனம் காத்தார் தோனி. இந்நிலையில் சொந்த ஊரான ராஞ்சியில் தோனி பங்கேற்ற  நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். 

அப்போது கூறிய அவர் 2019 உலகக் கோப்பையை இந்திய அணி எதிர்கொள்ள புதிய கேப்டனுக்கு சரியான  கால அவகாசம் கிடைக்க வேண்டும் என நினைத்ததாக கூறினார். கேப்டனுக்கு சரியான அவகாசம் இல்லாமல் திறமையான அணியை உருவாக்குவது சாத்தியமில்லை அதனால் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் என்று நினைத்து விலகியதாக கூறியுள்ளார். 

கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டாலும் அணியின் நலனை கருதியே டோனி இந்த முடிவில்லை எடுத்துள்ளார் என்பதை  அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். 

இங்கிலாந்து உடனான டெஸ்ட் தோல்விக்கு போதிய பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காமல் இருந்தது தான் காரணம் என தோனி கூறியுள்ளார். 

English Summary

dhoni opens the secret

செய்திகள்Seithipunal