CSK  அணிக்கு பெரும் பின்னடைவு.. தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4  புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 

இதில் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிசான்டா மகாலா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதில் சிசான்டா மகலா அடுத்த 2 வாரத்திற்கு விளையாட மாட்டார் எனவும் தோனி ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK players Dhoni and magala injury


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->