கூல் கேப்டன் தோனியா இது.? பாப் பாடகருடன்.. பாடல்.. வெறித்தனமான ஆட்டம்.!  - Seithipunal
Seithipunal


மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் தான் தற்போது விளையாடி வருகின்றார்.இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகின்றார்.

தோனி என்றாலே கூல் கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, அவரை எப்போதும் மிஸ்டர் கூல் என்றுதான் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.  மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட ரசிகர்கள் அவரை மறக்கவில்லை.

எப்போதும் அவரை கேப்டனாக தான் பார்த்து வருகின்றனர். இந்திய அணிக்கு தோனிக்கு பின் விராட் மற்றும் ரோஹித் போன்றோர் கேப்டனாக வந்தாலும் கூட அவரது இடத்தை இவர்களால் நிரப்ப முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. இத்தகைய நிலையில் துபாயில் நடந்த ஒரு பாட்டில் மகேந்திர சிங் தோனி பங்கேற்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதில் ஹார்டிக் பாண்டியா அவருடைய மனைவி சாக்‌ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பாப் பாடகருடன் சேர்ந்து தோனி பாட்டு பாடி நடனம் ஆடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோவில் இசான் கிஷான் மற்றும் க்ருணல் பாண்டியா ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain Dhoni Viral Video


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->