சிவன் புகைப்படம் வீட்டில் வைக்கக் கூடாதா? வைத்தால் பாதிப்புகள் ஏற்படுமா... பின்னணி என்ன?  - Seithipunal
Seithipunal


பெரும்பாலான வீடுகளில் சிவன் திருவுருவப்படம் இல்லாமல் இருக்கும். சிவபெருமான் உக்கிர தெய்வம் இல்லை. சாந்த தெய்வம் இல்லை. இரண்டும் கலந்த கலவை. பொதுவாக வீடுகளில் உக்கிரமாக உள்ள தெய்வங்களின் புகைப்படம் வைக்க கூடாது என முன்னோர்கள் தெரிவிப்பார்கள். 

உதாரணத்திற்காக காளி திருவுருவப்படம், காலபைரவர் போன்ற படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. அந்த வரிசையில் சிவபெருமான் திருவுருவ படமும் வீட்டில் வைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* சிவபெருமானுடைய தனிப்பட்ட திருவுருவபடத்தை தான் பூஜை அறையில் வைக்க கூடாது. ஆனால் சிவன் பார்வதியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். 

* இதற்கு எந்த ஒரு சாஸ்திர கட்டுப்பாடுகளும் கிடையாது. ஒவ்வொரு கடவுள் படத்திற்கும் அதிர்வலைகள் உள்ளது. அது போல் விக்கிரங்களுக்கு அதிகமான அதிர்வலைகள் உண்டாகும். அதனால் வீட்டில் வைத்திருந்தால் தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். 

* அப்படி செய்ய முடியவில்லை என்றால் வீட்டில் தெய்வ சிலைகள் வைக்க கூடாது. உள்ளங்கை அளவிற்கு குறைவான உயரமுள்ள சிலைகளை வைத்துக் கொள்ளலாம். அதைவிட பெரிய சிலைகளை வைக்கும் பொழுது தினமும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இல்லை என்றால் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகளும் சிக்கல்களும் ஏற்படும். 

* தெய்வ சிலைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது. அது போல் சிவபெருமானுடைய சாதாரண திருவுருவப்படத்திற்கு பக்தர்களை ஈர்க்கும் ஈர்ப்பழகைகள் உள்ளது. 

* இது பக்தர்களது மனதையும் எண்ண அலைகளையும் தொற்றிக் கொள்ளும். இதனால் இல்லற வாழ்வில் இருந்து முக்தி அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் சிவபெருமானுடைய திருவுருவ படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என முன்னோர்கள் தெரிவித்தனர். 

* அதற்கு பதிலாக சிவபெருமான், பார்வதி இணைந்து தம்பதியாக இருக்கும் திரு உருவ படத்தை வீட்டில் வைக்கலாம். இது நன்மையை உண்டாக்கும். எனவே சிவபெருமானை தீவிரமாக வணங்குபவர்கள் சிவன்-பார்வதி இருவரும் இணைந்துள்ள திருஉருவ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avoid lord Shiva picture placing home


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->