ஐபிஎல் போட்டியில் விளையாட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை! கிரிக்கெட் வாரியம் அதிரடி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரபல கிரிக்கெட் தொடரான  ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர்  டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு  வங்கதேச கிரிக்கெட் வீரர் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முஸ்தாபிஜுர் ரகுமான். இந்த ஆண்டு நடைபெற்ற  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து முஸ்தாபிஜுர் விளையாடினார். ஐபிஎல் தொடரின் போது  அவர் காயமடைந்தார்.  இதன் காரணமாக அன்மையில் நடந்து முடிந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியில் அவர் பங்கேற்க முடியாமல் போனது. பலவீனமான அந்த தொடரை வங்கதேச அணி 0-2 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்துவிட்டது.

இந்நிலையில் அதிரடி முடிவாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு உள்ளூர் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜுர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கூறிய போது,  ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடிய போது முஸ்தாபிஜுர் காயமடைந்தார். இதனால் அவர் எங்கள் நாட்டின் அணிக்காக விளையாட முடியாமல் போனதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு உள்ளூர் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு நாங்கள் வழங்கும்  தடையில்லா சான்றிதழ் அளிக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCB decide main player not allow to play 20 league in all around world


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->