'ஸ்மித்' மற்றும் 'வார்னரைத்' தொடர்ந்து இன்னொரு பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கும் தடை.! அந்த வேகப்பந்து வீச்சாளருக்கு ஏன் தடை விதித்தார்கள் தெரியுமா.!! - Seithipunal
Seithipunal


சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் நடந்த தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோருக்கு விளையாட, தடை விதித்தது கிரிக்கெட் வாரியம்.

இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் அடைந்தார்.

இதனால், அவர் வங்காளதேச அணியில் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாத நிலையில்,0-2 என்ற கணக்கில் வங்காளதேச அணி தொடரை இழந்தது. இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது

மேலும், இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்து, சொந்த நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது’ என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangladesh cricket board restricted to mustafizur rahman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->