இன்றாவது வெற்றி பெறுமா பெங்களூர்! பஞ்சாப்புடன் மோதல்! சாதனையை தவிர்க்க கோலி போராட்டம்!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் பெங்களூர் இடையேயான இருபத்தி எட்டாவது ஐபிஎல் லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முதலில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முந்தைய அணியில் விளையாடிய வீரர் விலஜோன் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை அதற்கு பதிலாக ஆண்ட்ரு டை ஆடுகிறார்.  அதைப்போல இந்திய வீரர்களான கருண் நாயர், அன்கிட் ராஜ்புட் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முருகன் அஸ்வின் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

பெங்களூர் அணியில் சவுத்தி நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல ராகுல் கெய்ல் களமிறங்கியுள்ளார்கள். 

பஞ்சாப் அணி : லோகேஷ் ராகுல், க்றிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், ஸர்ப்ராஸ் கான்,  நிக்கோலஸ் பூரான், சாம் கர்ரன், மந்தீப் சிங்,  ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, ஆண்ட்ரு டை  மற்றும் முருகன் அஸ்வின் 

பெங்களூர் அணி  : கேப்டன் விராட் கோலி, பார்த்திவ் படேல்,  டிவில்லியர்ஸ், மார்க் ஸ்டோனிக்ஸ், மொயின் அலி, அக்ஷதீப் நாத், பவான் நஹி, சஹால்,  நவதிப் சைனி முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ். 

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வி கண்டால் தொடர்ச்சியாக அதிக முறை தோல்வியடைந்த கேப்டன் என்ற மோசமான சாதனையை விராட் கோலி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.  



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangalore will get first victory of the season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->