சிந்துவுக்கு இந்த நிலையா..? இவ்வளவு நாட்களுக்கு பிறகு இப்படியொரு நிகழ்வு..!! - Seithipunal
Seithipunal


தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

நாக்பூரில் 82-வது சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு, முதல் முறையாக ரூ.1 கோடியை பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த போட்டிக்கு, தரவரிசையில் 50 இடங்களுக்குள் இருக்கும் இந்திய வீரர்- வீராங்கனைகள் நேரடியாக காலிறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள் என்று தேசிய பேட்மிண்டன் சங்கம் அறிவித்து இருந்தது.

இந்திய முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து 2-வது இடத்திலும், சாய்னா நேவால் 12-வது இடத்திலும் இருந்ததால் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து சிந்து மற்றும் சாய்னா அரையிறுதிக்கு முன்னேறினர். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்  மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.

சாய்னா வென்ற சில மணி நேரங்களிலேயே பி.வி.சிந்துவும் வெற்றி பெற்றதால் இந்தியாவின் இரு முன்னணி வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் களம் காண இருக்கிறனர்.

அயல்நாட்டு வீராங்கனைகளையே எதிர் தரப்பாக பார்த்து, வெகு நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் இரு ஜாம்பவான்கள் மோதுவதை பார்ப்பது வித்யாசமான நிகழ்வாக இருக்கப்போகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Badminton Nationals: It’s Srikanth vs Prannoy and Sindhu vs Saina in the finals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->