திடீர் திருப்பம்.. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பினார்...!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தொடக்க வீரராக களம் இறங்கும் கே.எல் ராகுல் சரியாக விளையாடாததால் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளார். 

சொந்த காரணங்களுக்காக திடீரென ஆஸ்திரேலிய புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்தூரில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே இந்தியா திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு வர முடியாத பட்சத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பாடு என தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia captain Pat Cummins returns to the country


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->