டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீத்தியுள்ளனர்.

இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதில், முதலிடத்தில் அனில் கும்ளே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்களும், கபில் தேவ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 99 விக்கெட்களும், சந்திரசேகர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 95 விக்கெட்களும், ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 95 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwin get 100 wickets against australia in test match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->