கலியுக அம்பேத்கரே! அண்ணாமலைக்கு வைத்த பேனரால் பதற்றம்.. அகற்றம்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் வரும் 5ஆம் தேதி வருகை தர உள்ளார். அவரை வரவேற்றும் விதமாக பாஜக நிர்வாகிகள் வந்தவாசியில்வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர்.

அதன்படி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பேனரில், "வந்தவாசி தொகுதி யாத்திரைக்கு வருகை தரும் கலியுக அம்பேத்கரே வருக வருக.." என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய குடியரசு கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி புரட்சி பாரதம் மற்றும் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பாஜகவினர் வைத்த பேனர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அங்கு விரைந்த வந்தவாசி டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பேனர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vandavasi bjp welcoming annamalai yatra banner removed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->