ஈரோடு எம்.பி தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணம்.. பகீர் கிளப்பிய வைகோ.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேற்று தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சிக்கொல்லியை குறித்து தற்கொலைக்கு முன் நின்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவை விரைந்து மருத்துவமனையில் கணேசமூர்த்திக்கு அழைக்கும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார். 

இதனைத்ஸதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது "கண்ணின் இமையாக திறந்த ஆருயிர் சகோதரர் கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். அன்றே சட்டமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 

மதிமுக பொதுக்குழுவில் அனைவரும் துரை வைகோ பெயரை பதிவுளித்த போது நான் அதை ஏற்கவில்லை. வாக்கெடுப்பு நடத்திபோது அதிலும் 99 சதவீதம் பேர் கூட்டணியில் இரண்டு தொகுதிகள் வாங்கி ஒன்று துறை வைகோ மற்றொன்று கணேசமூர்த்தி என வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். 

ஆனால் அது முடியாமல் போனது. எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி நல்ல தொகுதியை பார்த்து வெற்றி பெற வைத்து பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என எண்ணியிருந்தேன். அதன் பின்னரும் என்னிடம் பிரியமாக பேசிய கணேசமூர்த்தி இது குறித்து எதையும் காட்டிக் கொள்ளாமல் பதட்டமில்லாமல் சோகத்தில் உள்ளது போல தெரியாத அளவிற்கு இருந்துவிட்டு தென்னை மரத்திற்கு போடும் நஞ்சை கரைத்துக் குடித்துள்ளார். 

கணேசமூர்த்தியை காப்பாற்ற 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும்ஒ, 2 நாட்கள் போகட்டும் என மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். நஞ்சை முறிக்க மருந்து கொடுத்து எக்மோர் அருவி வைத்துள்ளனர். நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் நம்பிக்கை வையுங்கள் என கூறியுள்ளனர் என வைகோ தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko said ganesamoorthy no chance to contest again in Erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->