தமிழ்நாட்டிற்கு "மோடி 50 முறை வந்தாலும்" வெற்றி பெற முடியாது.!! பாஜகவை சாடிய வைகோ.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் மு.க ஸ்டாலினை சந்திக்க சென்ற துரை வைகோ வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்திற்கு அண்ணா காலத்திலிருந்து கோட்டையாக இருந்த திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 முறை அல்ல, 50 முறை தமிழகத்திற்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார்.

 இம்முறை மதிமுக திருச்சியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்‌. அதேபோன்று தமிழகத்திலும் புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதை மக்கள் பார்க்க தான் போகிறார்கள்" என பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko criticized BJP Narendra Modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->