ஸ்டாலின் அசந்த நேரத்தில்.. தட்டி தூக்கிய எடப்பாடி.. வெளியான அதிர வைக்கும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்ட திமுக  தெற்கு மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு மாவட்டம் என  இரண்டாக பிரிக்கப்பட்டது. தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமமுகவில் இருந்து விலகிய தங்க. தமிழ்ச்செல்வனும் உள்ளனர். இவர்களுக்கு இடையே  நீயா நானா என அதிகார யுத்தத்தால் ஏழாம் பொருத்தமாகவே இருந்துந்து வருகிறது.

அதேவேளையில் தேனி வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் விண்ணை முட்டியுள்ளது. இதன் காரணமாக தாமரைக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர்  இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமாருக்கும் மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் இடையே நடக்கும் அரசியலில் தாங்கள் பலிகடா ஆக்கப்படுவதாக திமுக உடன்பிறப்புகள் குமுறுகின்றனர்.

இதனிடையே ஓபிஎஸ்க்கு எதிராக தேனி மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சைலண்டாக மேற்கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்ட திமுகவில் யார் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள் என கண்காணித்து  அவர்களை அதிமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்துவந்தார். அந்த முயற்சியின் பலனாக இப்போது வெற்றியும் காணத் தொடங்கியுள்ளது. தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதை தங்க.தமிழ்ச்செல்வன் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் அதை செய்யத் தவறிவிட்டார் எனவும் தேனி  மாவட்ட திமுக உடன்பிறப்புகள் தங்கள் ஆதங்கத்தை காட்டியுள்ளார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni north dmk executives joined aiadmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->