சற்றுமுன் முதல்வர் வெளியிட்ட அவசர அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம்  நடத்த உள்ளதாக  ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர்  ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
                    
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட செய்தியில், தமிழக அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் 4 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டாக போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். வரும் 4 ஆம் தேதி சென்னை எழிலகத்தில் போராட்டம் நடத்தப்படும். அதன் பின் தொடர்ந்து, டிசம்பர் 5 ஆம் தேதி தாலுகா அளவிலும் டிசம்பர் 7 தேதி மாவட்ட அளவிலும் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார். போராட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கை அரசு பரிசீலனை செய்து வருவதால், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும். மேலும், புயல் நிவாரண பணிக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Announcement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->