விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அசத்தலான சின்னம்! தேர்தல் ஆணையம் ஒதுக்கியது!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று புதிய சின்னத்தினை வழங்கி உள்ளது. அவர்கள் போட்டியிட்டு வந்த மோதிரம் சின்னத்தினை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதால் அவர்கள் புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனை அடுத்து தமிழகத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்தது.  அதன்படி தேர்தல் ஆணையம் இன்று  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தினை ஒதுக்கியுள்ளது. 

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அதே போல ஆந்திராவில் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் கேரளாவில் போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அதே பானை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pot symbol for vck in lok sabha election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->