3 ஆவது அணியை தேடி சென்ற ஸ்டாலின்! காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு செல்வாக்கு இல்லை! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. 
 
ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென மக்கள் கூட்டம் கூடியது.  

ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென மக்கள் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், குமாரசாமி, தேவகவுடா, முக ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்)  உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இந்த பிரமாண்ட மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெங்காலியில் தனது உரையை தொடங்கினார். அப்போது, பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் உண்மையான சுதந்திர போராட்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார். 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் இடத்தில்( காங்கிரஸ் கூட்டணியில்) செல்வாக்கு இல்லாததால் மம்தாவின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin United India At Brigade : RB Udhayakumar Command


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->