தேமுதிகவுடன் திமுக கூட்டணி.?! முக ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தல் நெருங்கி வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அரசில் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் பரபரப்பாக நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் அதிமுக-பாஜாக-பாமக கூட்டணி பேச்சுவார்த்தை உடன்படிக்கையானது.

இந்த கூட்டணியில், பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

அதன்படி, தேமுதிக-வுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், முதல் தமிழக அமைச்சர்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு, திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். ஸ்டாலின் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முக ஸ்டாலின், ''அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin speak out dmk allaince with dmdk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->