முக ஸ்டாலினின் ராஜதந்திரம்! சரியாக செய்து முடித்து, சாதித்து காட்டிய திமுக!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் வித்தியசமான அரசியலை தேமுதிக நடத்தி வருகிறது. தொகுதி கூட்டணி பேச்சு வார்த்தையில் மிகப்பெரிய பேரத்தை நடத்தி வருகிறது. கூடுதலாக அனுபவமிக்க அரசியல்வாதியான, பாரம்பரிய கட்சியின் தலைவரான ஸ்டாலினின் மறுமுகத்தை போட்டுடைத்தது. இந்நிலையில் தான் தேமுதிகவின் இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்க முக ஸ்டாலின் திட்டமிட்டு, பொருளாளர் துரைமுருகனை வைத்து காய் நகர்த்தினார். 

அரசியலில் நம்பிக்கையோடு இரகசியமாக பேசிக் கொண்டதை ஊடக வெளிச்சத்தில் வெளியிட்டது தேமுதிக. இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை செயலாளர் சுதிஷ், ஒரு படி மேலே போய் நட்பின் அடிப்படையில் கட்சித் தலைமைகளைப் பற்றி பேசிக் கொண்டதை, பகிர்ந்து கொண்ட விஷயங்களை வெளியிட்டால் திமுகவிற்கு அசிங்கம் என்று பேசியுள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி பேசி வந்த தேமுதிகவை தேடி வந்து கூட்டணி உறவிற்கு திமுக அழைத்த காரணத்தாலேயே தேமுதிக தனது உண்மையான பலத்தை மறந்து நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைத்து இரு துருவங்களாக உள்ள கட்சிகளுடன் ஒரே நேரத்தில் அரசியல் பேரம் நடத்தியது. இந்த அரசியல் பேரத்தை தேமுதிக தொண்டர்களும், தமிழக மக்களும் ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

இதில் பாமகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் இருந்த திமுக, பாஜகவுடன் கூட்டணி பேசி வந்த தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நேரடியாகவே களமிறங்கியது. அதுவும் திமுக தலைவர், கடந்த தேர்தலில் 40 சதவீத வாக்கை பெற்ற கட்சியின் தலைவர், நான்கு சதவீத வாக்கு கூட வாங்காத கட்சி தலைவர் வீட்டின் படியேறினார். அப்போது உடல்நலம் விசாரிக்க வந்ததாக ஸ்டாலின் மழுப்பினர். ஆனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியல் தான் என போட்டுடைத்தார். இதில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த ஸ்டாலின் தேமுதிகவின் இரட்டை நிலையை மக்களுக்கு தெரிய வைக்கவே துரைமுருகனை வைத்து காய் நகர்த்தியதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து தான், துரைமுருகன், சுதீஷ் அரசியல் நகைச்சுவையானது நடந்தேறியது. தேமுதிகவின் இரட்டை நிலையை ஊடகங்களுக்கு மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டது திமுக. ஆனால் உண்மையில் இதில் யார் செய்தது அநாகரிகம் என்பதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

ஏனெனில் எதிர் துருவத்தில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேசிய கட்சியை முறைமுகமாக சந்திக்க சென்ற ஸ்டாலின் செய்தது அரசியல் அநாகரீகமா? அல்லது வெளிப்படையாகவே இரண்டு புறமும் கூட்டணி பேசிய தேமுதிகவின் சுதீஷ் செய்தது அநாகரீகமா? என்பதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆக மொத்தம் கூட்டணிக்காக இரண்டு கட்சிகளுமே, அதன் தலைவர்களுமே இரட்டை வேடம் போட்டது அமபலமாகியுள்ளது. 

தேமுதிக பங்குக்கு ஸ்டாலினின் இரட்டை நிலையை பகிரங்கப்படுத்த, திமுக தரப்பில் சுதீஷின் இரட்டை நிலையை பகிரங்கப்படுத்தி சாதித்துள்ளார்கள். தங்கள் கட்சியின் சுயநலத்திற்காக இரண்டு கட்சிகளுமே எவ்வித கொள்கைகளையும் பார்க்கவில்லை, கூட்டணியை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதில் திமுக மற்ற கட்சி கூட்டணிகளை விமர்சிப்பது தான் அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN MASTER PLAN ABOUT DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->