முதல்வர் முக ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் பிரச்சாரம்.!
mk stalin election campaighn in vilupuram
தமிழகத்தின் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
மேலும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேச உள்ளார்.
இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
English Summary
mk stalin election campaighn in vilupuram