கொடநாடு விவகாரம்: அனைத்து உண்மையையும் சொல்ல தாயார்.!! சயான்-மனோஜ் கூட்டாக பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இரண்டு தினங்களுக்கு முன் தலைநகர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற தொடர் மரணங்கள் தொடர்பான புலனாய்வு வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை அனைத்தும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம், அதிமுகவின் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரிடமும் வாங்கப்பட்ட மன்னிப்பு கடிதங்கள் போன்றவைகள் அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோடநாட்டில் கொள்ளை நடந்த போது அதில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்? என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த ஆவண பட விவகாரத்தை ஆரம்பம் முதலே கையில் எடுத்த திமுக தலைவர் முகஸ்டலின், கடுமையான விமர்சனங்களை முதல்வர் பழனிச்சாமி மீது வைத்து வருகின்றார். மேலும், முதல்வர் பதவி விளக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனது மனைவியையும், மக்களையும் இழந்த சயன் தமிழக அரசு மீது கடுமையா ஒரு குற்றச்சாட்டை தெரிவிக்கும் காணொளி வைரலாக பரவி வருகிறது. இதில், தனது கூட இருந்தவர் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சயன தெரிவிக்கிறார். மேலும், இந்த விவகாரத்தின் சிபிஐ போன்ற மத்திய போலீஸ் விசாரணை நடத்தினால் நான் அனைத்து உண்மையையும் கூற தயார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த காணொளியில் அவருடன் மனோஜ் உடன் இருக்கிறார். இந்த காணொளியை திமுகவின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 


இதற்கிடையே, கோடநாடு விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையில் தனிப்படை ஒன்று டெல்லி விரைந்து உள்ளது. கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சயான், மனோஜ், ரவி ஆகியோரை பிடிக்கவும் தனிப்படை ஒன்று கேரளா விரைந்த நிலையில், நேற்று மாலை சயான், மனோஜ் இருவரையும் கைது செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanadu issue sayan and manoge want to cbi inquiry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->