முன்னாள் அமைச்சர் திடீர் கைது.!! என்னாச்சு? கொந்தளிக்கும் அதிமுக தரப்பு .!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் கள்ளக்குடி தாலுகா கே. சென்னம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை நிறுவனம் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை கேட்டுள்ளார். அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக அறிக்கை அளித்துள்ளனர். 

இந்த நிலையில் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோழி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுடன் இணைந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "கள்ளிக்குடி தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை அச்சுறுத்தும் இந்த உரத் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாளைய நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் போராடி வரும் நிலையில் ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை, எந்த வேலை வாய்ப்பு இல்லை. மக்களுக்கு கேடு தரும் இந்த தொழிற்சாலையை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும் ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இயங்க க்கூடாது. அதனை நிரந்தரமாக மூட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.  

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டவரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். போலீசார் இந்த செயலுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former minister RB UdayaKumar arrested in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->