விரைவில் சென்னை, கோவை, மதுரைக்கு வரப்போகும் வரப்பிரசாதம்! தமிழக அமைச்சரின் அசத்தலான அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே இல்லாத வகையில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது. அந்த ஒப்பந்தம் ஆனது போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்டது ஆகும். 

தமிழகத்தில் மாசுபாதிப்பினை குறைக்கும் பொருட்டு புதியதாக 2000 மின்சா பேருந்துகளையும், பத்தாயிரம் BSS 6 ரக இன்ஜின்களை கொண்ட புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 

இதுவரை இந்தியாவில் எங்கும் மின்சார பேருந்துகள் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் மிக விரைவில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டில் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாசு பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருக்கும் என கருதப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electrical bus in tamilnadu coming soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->