மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


சமையல் எரிவாயு மானியம் அனைவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது.  சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால், இது எரிவாயு இணைப்பு  வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது.

சமையல் எரிவாயு மானியம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் எண்ணிக்கை 9 கோடி மட்டுமே. மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில்  22 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்காது!

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மட்டுமின்றி, ஏழை & நடுத்தர மக்களாலும் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. அந்த குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆகும் செலவு அதிகமாக இருக்காது. அதனால், எரிவாயு மானியத்தை நீட்டிக்க வேண்டும்!

மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால், மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை  போக்க முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About petrol Diesel issue May 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->