இதையெல்லாம் பண்ணாதீங்க..! தொண்டர்களுக்கு குமாரசாமி வேண்டுகோள்..!!  - Seithipunal
Seithipunal


 நாளை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களுக்கு கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை முதல்-மந்திரியாக கர்நாடகாவில் பதவி ஏற்க உள்ள மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி தனது தொண்டர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் பொது மக்களுக்கு  இடையுறாக  கட்அவுட், பேனர் போன்றவைகளை வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

எனது கட்சி தொண்டர்கள் எப்போதுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே எனது வேண்டுகோளை ஏற்று யாரும் கட்அவுட், பேனர் வைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று மத சார்பற்ற ஜனதா தளம்  கட்சி தலைவர் குமாரசாமி  கூறியுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DON'T DO THIS IN ELECTION TIME


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->