பெரும்பான்மை சமூகங்களின் வாக்கு வங்கியை இழக்கிறதா திமுக?!! ஸ்டாலின் மவுனம் சாதிப்பது என்?.!! - Seithipunal
Seithipunal


 

நேற்று, அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து பல்வேறு கட்சிகளை மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர். 

விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நடந்த நிகழ்வுகளில் சில முழக்கங்கள், தீர்மானங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு, நடந்த ஒரு நிகழ்ச்சியில் விசிகவை சேர்ந்த இளைஞர் ஒருவர், மாற்று சமூகத்து  பெண்களை  காதலிப்போம் , திருமணம் செய்வோம் , கட்டியணைப்போம் என தகாத முறையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


இதனால், இந்த வீடியோவை காணும் மற்ற சமூகமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதனால், தலித் சமூகம் அல்லாத மற்ற சமூகத்தினரின் வாக்கு வங்கியை, திமுக இழக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, விசிக-திமுக கூட்டணி விவகாரம் பிரச்சனையில் இருக்கையில் இது திமுகவிற்கு புதிய தலைவலியை உண்டாக்கி இருப்பதாக திமுகவினர் புலம்பி வருகின்றனர். மேலும், சில திமுக அல்லாத இளைஞர்கள், ட்விட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், ' இவ்வாறு தகாத முறையில் பேசும் விசிகவினரை உடன் வைத்திருக்கும், திமுக ஆட்சிக்கு வந்தால், தலித் அல்லாத சமூகத்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இருக்காது!' என கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், திமுகவிலுள்ள பிற சமூக அரசியல்தலைவர்கள் 'தலைவர் ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து விசிக வை நிச்சயம் எச்சரிப்பார்', என திமுகவின் மாற்று சமூக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிவருவதாகவும், இவ்வாறு, ஸ்டாலின் அவர்கள் அமைதியாய் இருப்பது அவரது வாக்கு வங்கியை பாதிக்கும் எனவும் தங்களுக்குள்ளாகவே, தலைவர்கள் கிசுகிசுப்பதாய்  தகவல்கள் வெளியாகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VOTE WILL REDUCE TO OTHER COMMUNITY VOTES


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->