திமுக கூட்டணியின் இறுதி வடிவம்?! கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளும்! சிக்கலில் நிற்கும் இரண்டு தொகுதி! - Seithipunal
Seithipunal


திமுகவில் கூட்டணி பேச்சுகள் முடிவுற்றுது. திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமும் முடிந்தது. திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எப்போது அறிவிக்கப்படும்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் இரண்டு தொகுதிகள் மட்டுமே சிக்கலில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஆனாலும் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி முடித்த பிறகு தொகுதிகள் எவை என்பது வெளியிடப்படும் என தெரிகிறது. நாளைக்குள் வெளியாகும் என தெரிகிறது.

திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் ஏறக்குறைய தயார்தான் என்கிறார்கள். இன்னும் இரண்டு தொகுதிகள் மட்டுமே குழப்பத்தில் உள்ளது. அதன்படி, 

திமுக போட்டியிடும் தொகுதிகளாக எதிர்பார்க்கப்படுவது, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தேனி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என தெரிகிறது. இதில் தேனி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளில் தேனி இல்லையாம். 

விசிகவிற்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதாகவும்,  மதிமுகவிற்கு ஈரோடு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் கோவை தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளிலும்,  போட்டியிட உள்ளதாக தெரிகிறது. 

அதேபோல ஐஜேகே பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும், கொமதேக நாமக்கல் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

மீதமுள்ள தொகுதி காங்கிரஸ்க்கு தான் என்பது உறுதியாகிறது. அதன்படி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், அரக்கோணம், சேலம், திருவள்ளூர் , திருச்சி, ஆரணி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் ஆரணி மற்றும் திண்டுக்கல்லில் தான் சிக்கல் நிலவுகிறது. இங்கு எதிர்தரப்பில் பாமக நிற்கும் என எதிர்பார்ப்பு இருப்பதால், அங்கு திமுக நிற்க விருப்பப்படுகிறதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance party wise constituency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->