''டார்கெட் 10''...அதிமுகவிற்கு ஆப்பு ரெடி.!  தினகரனின் அதிரடி திட்டம்.!! எடப்பாடிக்கு மட்டும் தனி திட்டம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை பெசன்ட் நகரில் இன்று மாலை (21.07.2018) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் பல அதிரடி தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இனி என்ன நடக்கம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான். 

தற்போது நடந்திருக்கும் வருமானவரி சோதனையில் சிறிய அளவு தான் சிக்கியுள்ளது. இன்னும் பிடிபடாத பணம் ஏகப்பட்டது உள்ளது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கியுள்ள பணம் அனைத்தும் கொள்ளையடித்த பணம் தான்.

பசுமையான மலை, விவசாய நிலங்கள், காடுகளை அழித்து 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களின் பணம், இயற்க்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி ஆட்சியை மத்திய அரசு தாங்கி பிடிக்கக்கூடாது. 

வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். ஆனால், எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், அம்மாவிற்கு தூரோகம் செய்த பெயர்களில் ஹிட் லிஸ்டில் உள்ள 10 பேர் நிற்கும் தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி அவர்களை படு தோல்வியடைய செய்வேன். அதிலும் முக்கியமாக எடப்பாடி நிற்கும் தொகுதியில் அவருக்கு எதிராக நிற்க வைக்க போகும் நபரை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்''. என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தினகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயராகும் விதமாக தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து உள்ளார். மண்டலப் பொறுப்பாளர்களையும் தினகரன் இன்று நியமனம் செய்துள்ளார். தினகரன் நியமித்த பொறுப்பாளர்களில் அதிமுகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DINAKARAN OPEN TALK ABOUT LOK SABHA ELECTION CANDIDATE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->