ஆடாமலே வெற்றி பெற்ற  ஓபிஎஸ் இபிஎஸ்! தினகரனின் திட்டமெல்லாம் முடிவுக்கு முடிந்தது! - Seithipunal
Seithipunal


குக்கர் சின்னம் மட்டுமல்லாது இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தால் இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இதன் மூலம் தினகரன் இனி அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் சட்டரீதியாக உரிமை கோர முடியாது என்பது உறுதியாகிறது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு தாக்கல் செய்ய தினகரனுக்கு வழி இருக்கிறது. ஆனாலும் இந்த வழக்கில் தினகரன் இதற்கு மேலும் மேல் முறையீடு செய்வது சந்தேகம் தான். ஏனெனில் இதில் தோல்வி அடைவது மூன்றாவது முறையாகும். அப்படியே மேல்முறையீடு  செய்யப்பட்டாலும் அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதும் மிக மிக குறைவு.

இரட்டை இலை சின்னம் மீதான தினகரனின் சட்ட ரீதியான போராட்டம் முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது. இதன் மூலம் நீண்ட கால தினகரன்  சட்ட போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. தினகரன் இதற்கு மேல் தனது அரசியல் பயணத்தை தொடர வேண்டுமானால் அவர் அறிவித்த அமமுக வையோ அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியை அறிவித்து அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அவர்களுக்கென்று வேறு புதிய சின்னத்தை பெற்று தான் நீடிக்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலை. 

தினகரன் குக்கரை கேட்டு போக, இறுதியில்  ஓபிஎஸ் இபிஎஸ்க்கு இரட்டை இலை உறுதியானது தான் மிச்சம். இன்னும்  ஓபிஎஸ் இபிஎஸ் க்கு கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கு மட்டுமே எதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinkaran two leaves case rejects by supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->