திருவாரூரில் செதுக்கப்பட்ட ஆப்பு.! குவிக்கப்பட்ட அரசு படை.!! கலங்கும் வேட்பாளர் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர்.கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதியில்., கலைஞரின் மறைவிற்கு பின்னர் வரும் 28 ம் தேதியதன்று இடைத்தேர்தல் நடக்கவிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 

இதன் மூலமாக திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் காரணமாக தேர்தல் பணிகளில் சுமார் 2500 அரசு அதிகாரிகள் அதிரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அந்த வகையில்., காவல் துறையினரும் - அரசின் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவது மற்றும் இலவசமாக மக்களுக்கு பொருட்கள் ஏதேனும் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் தாங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என்பது குறித்து இரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

by election on thiruvarur., govt squad action will immediately


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->