ஓ.பி.எஸ்-க்கு ''0'' தொகுதி.. இதயத்தில் இடம் ஒதுக்கியது பாஜக.!! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஓபிஎஸ் அணியினருக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக ஓபிஎஸ் க்கு உரிய மரியாதை அளிக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆர்சொகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கிடையே ஓபிஎஸ் நாளை காலை 10 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது எதிரில் உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணி குறித்து ஓபிஎஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் எதிரில் மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,

பாஜக - 20 தொகுதிகள் 

பாமக - 10 தொகுதிகள் 

த.மா.கா - 3 தொகுதிகள் 

அ.ம.மு.க - 2 தொகுதிகள் 

த.ம.மு.க - 1 தொகுதி 

ஐ.ஜே.கே - 1 தொகுதி 

ஏ.சி. சண்முகம் - 1 தொகுதி 

தேவநாதன் யாதவ் - 1 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் அணியினருக்கு பாஜக இதயத்தில் இடம் ஒதுக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அணியினர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டால் 20 தொகுதிகளில் ஓபிஎஸ் அணைக்கு அதிகபட்சம் 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP not allocated single seat to OPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->