தேர்தல் அறிக்கையை வெளியிடும் பாஜக - எதிர்பார்ப்பில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பதினெட்டாவது மக்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் மாதம் 4-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும். 

இந்தத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் பா.ஜனதா இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp election promise announce at today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->