#BREAKING | ராகுல் காந்தி வாகனம் மீது கல் வீச்சு.‌. கண்ணாடிகள் உடைப்பு.!! மேற்கு வங்கத்தில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை பயணத்தின் இரண்டாவது பகுதியை வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவரின் இந்த பாதயாத்திரை மேற்குவங்கம் வழியாக பெற்று வருகிறது.

ராகுல் காந்தி இன்று வழக்கம் போல தனது ஒற்றுமை பாதயாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டா என்ற பகுதியில் அவரது வாகனம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ராகுல் காந்தியை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நடந்து வரும் நிலையில் வாகனம் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகிய நிலையில் அவர் பாஜகவுடன் கை கோர்த்ததை ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது வாகனம் இது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Rahul Gandhi car in West Bengal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->