கடலூர் மாவட்டத்திற்கு அன்புமணியால் கிடைத்த வரப்பிரசாதம்! அடுத்தடுத்து அசத்தல்!  - Seithipunal
Seithipunal


தாம்பரம் - திருநெல்வேலி ரயில் :

தாம்பரம் - திருநெல்வேலி இடையே அந்த்யோதயா விரைவு ரயில் தினசரி இயக்கப்படுகிறது. முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில்கள் ஏழைகள் நலனுக்காக விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கடலூர் இரண்டு ரயில் நிலையங்களில் ஒரு இடத்தில் கூட இந்த ரயில் நிற்கவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் பல விரைவு ரயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் நிறுத்தப்படாமல் செல்கின்றன. ஆனால், அதே ரயில்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைந்ததும் ஒவ்வொரு சிறு ஊரிலும் நின்று செல்கின்றன. இந்த அநீதி களையப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டுக்குள்ளும் செல்லும் ரயில்கள் முக்கியமான நகரங்களில், குறிப்பாக பின் தங்கிய வடக்கு மாவட்டங்களில், நின்று செல்ல வேண்டும்.

தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவு ரயில் (16191/16192) கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களில் நின்று செல்ல வேண்டும், சிதம்பரம் நடராஜர் ஆலயம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், நெய்வேலி அனல்மின் நிலையம், கடலூர் நகரம் என பல முக்கியமான இடங்களுக்கு செல்வோருக்கு இது பெரும் பயனாக இருக்கும்.

இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் ரயில் :

அதே போன்று, இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் ஆகிய இரண்டு ஆன்மீக தலங்களுக்கு இடையே இயங்கும் வாரந்திர ரயில் (18495/18496) தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக தலமான சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயிலின் கால அட்டவணையை சிதம்பரத்தில் நின்று செல்லுமாறு மாற்ற வேண்டும். சைவ சமயத்தின் தலைமை இடமான சிதம்பரத்தில் இந்த ஆன்மீக நகரங்களுக்கு இடையிலான ரயில் நின்று செல்ல வேண்டும்.

மேற்கண்டவாறு கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ரயில்களை நிறுத்துவது, பின்தங்கியுள்ள இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயனாக இருக்கும்; கல்வி மற்றும் சுற்றுலா நோக்கில் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்வோருக்கும் பயனாக இருக்கும்.

பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு அடிப்படை கட்டுமானங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் முதன்மையாக தேவைப்படுகின்றன. கடலூர் மாவட்டத்திற்காக புதிய வழித்தடத்தையோ புதிய ரயிலையோ கேட்கவில்லை. அந்த வழியாக ஏற்கனவே இயங்கும் ரயில்கள் முக்கியமான இடங்களில் நின்று செல்ல வேண்டும் என்றுதான் நான் கோருகிறேன். கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில மேற்சொன்ன மாற்றங்களை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கடலூர் மாவட்ட மக்கள் இதற்காக போராட்டத்தை நடத்த முன் வந்தார்கள். நான் இந்த விவகாரத்தை தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளேன். அம்மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இந்த தகவலை கடந்த  27.4.2018-ல்  மருத்துவர் அன்புமணி MP தெற்கு ரயில்வே துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். பின்னர்  22.6.2018 அன்று அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அந்த்யோதயா, புவனேஸ்வரம் ரயில்கள் இனி சிதம்பரத்தில் நிற்கும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவு ரயில் மற்றும் இராமேஸ்வரம் - புவனேஸ்வரம் ரயில் சிதம்பரத்தில் ஆகியன இன்று முதல் (9.3.209 ) நின்று செல்லும் என இரயில்வே துறை அறிவித்துள்ளது. இது சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் முக்கியமான ஒன்று. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

அண்மையில் தமிழகத்திற்கு கிடைத்த ஒரே புதிய ரயில்வே திட்டமான தருமபுரி மொரப்பூர் ரயில்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani demands accepted by southern railway


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->